Monday, September 25, 2017

மீண்டும் தர்காநகரில் இரு குழுக்கள் மோதல். 2 பேர் வைத்தியசாலையில். #ALUTHGAMA

அளுத்கம, தர்காநகர் வெலிபிடியவில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு  இடம்பெற்ற மோதலில்  வெட்டுக் குத்துக் காயங்களுக்கு இலக்காகிய இருவர் களுத்தறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்கு காரணமானவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த இரு இளைஞர்களும் தர்காநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் களுத்தறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒருவரின் தலையில் வாள் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும், தற்பொழுது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

போதைப் பொருள் சம்பந்தப்பட்ட விடயம் மோதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலருக்கு இன்னுமொரு குழுவினர் அவ்வாறான தவறைச் செய்ய வேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், இதனால், கோபமடைந்த சம்பந்தப்பட்ட குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (DC)

Facebook இல் போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாக அமைச்சர் றிஷாட் புகார்.

தமக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பிரச்சாரம் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மியன்மார் ரோஹின்ய முஸ்லிம்களை தாம் இலங்கையில் குடியமர்த்த முயற்சிப்பதாக சமூக ஊடக வலைமைப்புக்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பதியூதீன் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இனவாதத்தை தூண்டும் நோக்கில் இவ்வாறு இணையத்தின் ஊடாக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st* பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற...