Thursday, June 29, 2017

பெற்றோரை நோகடிக்காதே!

@ *Gallellanews1st*

*பெற்றோர்களை* 
    *நோகடிக்காதே...*
     *நாளை உன் பிள்ளையும்*
     *உனக்கு அதை தான்*
     *செய்யும்...!!*

*பணம் பணம் என்று*
     *அதன் பின்னால்*
     *செல்லாதே...*
     *வாழ்க்கை போய்*  
     *விடும்...*
     *வாழ்க்கையையும்*
     *ரசித்துக் கொண்டே* 
     *போ...!!*

*நேர்மையாக இருந்து*
     *என்ன சாதித்தோம்*
     *என்று* *நினைக்காதே...*
     *நேர்மையாக இருப்பதே*
     *ஒரு சாதனை தான்...!!*

*நேர்மையாக*
     *இருப்பவர்களுக்கு*
     *சோதனை வருவது*
     *தெரிந்ததே,* *அதற்காக*
     *நேர்மையை கை விட்டு*
     *விடாதே...*
     *அந்த நேர்மையே*
     *உன்னை*
     *காப்பாற்றும். ..!!*

*வாழ்வில் சின்ன சின்ன*
     *விஷயத்திற்கெல்லாம்*
     *கோபப்படாதே..*.
     *சந்தோஷம்*
     *குறைவதற்கும்,*
     *பிரிவினைக்கும்* *இதுவே*
     *முதல் காரணம்...!!*

*உன் அம்மாவிற்காக*
     *ஒரு போதும்*
     *மனைவியை விட்டு*
     *கொடுக்காதே...*
     *அவள் உனக்காக*
     *அப்பா* *அம்மாவையே*
     *விட்டு வந்தவள்...!!*

*உனக்கு உண்மையாக*
     *இருப்பவர்களிடம்...*
     *நீயும் உண்மையாய்*
     *இரு...!!*

*அடுத்தவர்களுக்கு தீங்கு*
     *செய்யும் போது*
     *இனிமையாகத்தான்*
     *இருக்கும்...*
     *அதுவே உனக்கு வரும்*
     *போது தான், அதன்*
     *வலியும்* *வேதனையும்*
     *புரியும்...!!*

*உன் மனைவி*
    *உண்மையாக இருக்க*
    *வேண்டும் என்று, நீ*
    *நினைப்பது போல்...*
    *நீயும் உண் மனைவிக்கு*
    *உண்மையாய் இரு,*
    *எந்த* *பெண்ணையும்*
    *ஏறெடுத்து* *பார்க்காதே,*
    *அதுவே உன்*
    *மனைவிக்கு* *கொடுக்கும்*
    *மிகப்பெரிய பரிசு...!!*

*ஒருவன் துரோகி*
      *என்று தெரிந்து*
      *விட்டால்...*
      *அவனை விட்டு*
      *விலகியே இரு...!!*

*எல்லோரிடமும்*
      *நட்பாய் இரு...*
      *நமக்கும் நாலு*
      *பேர் தேவை...!!*

*நிறை குறை இரண்டும்*
      *கலந்தது தான்*
      *வாழ்க்கை...*
      *அதில் நிறையை மட்டும்*
      *நினை...*
      *நீ வாழ்க்கையை*
      *வென்று* *விடலாம்...!!*

*எவன் உனக்கு உதவி*
      *செய்கிறானோ,*
      *அவனுக்கு மட்டும்*
      *ஒரு நாளும் துரோகம்*
      *செய்யாதே...*
      *அந்த பாவத்தை நீ*
      *எங்கு போனாலும்*
      *கழுவ* *முடியாது...!!*

*அடுத்தவர்களைப்*
      *போல் வசதியாக*
      *வாழ முடியவில்லை*
      *என்று நினைக்காதே...*
      *நம்மை விட* 
      *வசதியற்றவர்கள்*
      *கோடி பேர்*
      *இருக்கிறார்கள்*
      *என்பதை மனதில்*
      *கொள்...!!*

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும்* *இடையில்,*
      *நீ செய்யும் பாவம்*
      *புண்ணியம் மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

Www.gallellanews1st.blogspot.com

Wednesday, June 28, 2017

நோன்புப் பெருநாள் பற்றி...

*நடந்து முடிந்த முஸ்லிம்களின் பண்டிகை பற்றி இந்து நண்பன் ஒருவர் எழுதியது*

RAHMAN ABDUL AZEEZ

(நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்)

இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையான நோன்பு பெருநாள் நடந்து முடிந்தது.

இன்று
அவர்கள் பட்டாசு வெடித்து காற்றை மாசுபடுத்தவில்லை,

நிலத்தையும் குப்பையாக்கவில்லை.

#சாயம் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை கரைத்து நீர் நிலையை மாசுபடுத்தவில்லை.

எதையும் சாலையில் போட்டு உடைத்து மற்றவருக்கு காயம் ஏற்படுத்தவில்லை.

#சாலையில் நெருப்பு வைத்து கொளுத்தி பிறருக்கு இடையூறு தரவில்லை.

#இன்றைக்கு அவர்கள் தொழுகையை பார்வையிட வந்த காவல் அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்படவில்லை.

இன்றைக்கு அவர்களுக்கு பயந்து யாரும் கடையை அடைக்கவில்லை.

#இன்றைக்கு அவர்கள் யாரும் சினிமா தியேட்டர்களில் முண்டியடிக்கவில்லை.

#டாஸ்மாக் கடைகளில் எந்த சிறப்பு விற்பனையும் இல்லை.

#சண்டை சச்சரவு வெட்டுக்குத்து குழப்பம் எதுவும் நிகழவில்லை.

#எந்தக் கடைக்காரரிடமும் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் காடைக்காரரைத் தாக்கவில்லை.

இன்று
#அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள்,  மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்.

#இறைவனுக்காக பலி பிராணிகளை அறுத்து சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் இறைச்சியை வழங்கினார்கள்.

#ஏழைகளுக்கு உதவி செய்ய  பிராணிகளின் தோல்களை திரட்டினார்கள்.

எவ்வளவோ நன்மைகள்.

பண்டிகையிலும் கூட ஏழைகளின் நலன் கருதும் அவர்களுக்கு ஏன்டா தடை போடுறீங்க?

Sunday, June 25, 2017

ஈத் முபாரக்

ஈத் முபாரக்… தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

★றஹ்மான் அப்துல் அஸீஸ்★

ஒரு மாதமாய்
இரவில் நின்று தொழுதோம்… ஸஜூதில் விழுந்து அழுதோம்…
வஹியோடு உறவாடினோம்… பசியோடு பண்பட்டோம்…

வீண் வம்புகளை விட்டு விலகியிருந்தோம்.
வீடு தேடிவந்த சர்ச்சைகளையும் சமாதானமாய் தீர்த்து வைத்தோம்.

நடுநிசியில்… கல்புக்குள் பல்புகள் போட்டோம்.
கரமேந்தி இறைவனிடம் எல்லாம் கேட்டோம்!

புலன்களுக்கு புடம்போட்டோம்!
கடிவாளமிட்டு பயிற்சி பெற்றோம்!

பொறுமை கொண்டோம்…
பொல்லாங்கு தவிர்த்தோம்…

தற்காப்பு கேடயம் பெற்றோம்…
எதிரியை வீழ்த்தும் தக்வா எனும் பலமும் பெற்றோம்…

மாதம் முடிந்தாயிற்று…
சிறைப்பட்ட ஷைத்தான் சினத்தோடு வருவான்.
கனரக ஆயுதங்களோடு போர்முரசு கொட்டுவான்.

ரமழான் தந்த தக்வாவும் பயிற்சியும் பண்பாடும்
செழிப்பாக இருக்கும் வரை போராட்டத்தில் வெற்றி நமக்கே!
(இன்ன லில்முத்தகீன மபாஸா)

இது ஒரு வெற்றிப் பெருநாளாக அமையட்டும்!

ஈத் முபாரக்… தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!

💫 Rahman Abdul Azeez💫
💫Gallellanews1st💫
             25.06.2017

Thursday, June 22, 2017

'ஞானசார' நாடகமும் ஆதிக்க அரசியலின் எழுச்சியும்.

==••¥==••¥==••¥==••¥==•
"ஞானசார” நாடகமும் ஆதிக்க அரசியலின் எழுச்சியும்..!!
==••¥==••¥==••¥==••¥==•

ஹ்மான் அப்துல் அஸீஸ்
ஊடகவியலாளர்

மாட்டுத் திருடன், மாங்காய்த் திருடன், மணல் கொள்ளையடித்தவன் முதல் ஆளையாள் சட்டையைப் பிடித்தவன் கூட வருடக் கணக்கில் நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, முழு நாடே பார்த்திருக்க கச்சிதமாக ஒரு பகற்காட்சி நேற்று காண்பிக்கப்பட்டது.

நல்லாட்சியில் எல்லாம் நல்லதே நடக்கும் என நம்பியோருக்கு ஏமாற்றம், எந்த ஆட்சியும் அரசியல் ரீதியாகத் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யும் என ஏற்றுக்கொண்டோருக்கு சிறு அதிர்ச்சி, ஜனநாயகம் மலர்ந்து விட்டதென நம்பியோருக்கு பெரும் ஏமாற்றம்.

ஆனால், இவை கால சூழ்நிலையில் வெற்று உணர்ச்சிகளாக அடங்கிப் போய்விடும் என்பதே அரசியல் கணக்கு.

பிரதமர் நியமனம், பிரதம நீதியரசர் நியமனம், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களில் இந்த நல்லாட்சி இதை விடச் சிறந்த காட்சியைக் காண்பித்திருந்த போதிலும் அதீத எதிர்பார்ப்பும், ஒரு கொடுங்கோல் ஆட்சியின் முடிவில் விடுதலை பெற்றதாக அன்று பொங்கியெழுந்த உணர்வுகளும் இவற்றை சரி வர எடை போட்டு எதிர்காலத்தை அளவிட மறுத்து நின்றது.

போக மாட்டேன் என்று சொன்ன டி.எம் ஜயரத்னவையும் மொஹான் பீரிசையும் மிக இலகுவாக வெளியேற்றிய நுணுக்கம் அரசியல் உணர்வில் மறைந்திருந்தது. அதிலும் பிரதம நீதியரசராக இருந்த, சட்டத்தைக் கரைத்துக் குடித்ததாகக் கருதியிருந்த மொஹான் பீரிசுக்கே புதுச் சட்டம் சொல்லிக் கொடுத்து உங்கள் நியமனமே செல்லுபடியாகாது என அவரை பிரதம நீதியரசர்கள் பட்டியலிலிருந்தே நீக்கியது நல்லாட்சி.

நாடாளுமன்றில் ஆசனங்களின் நிறம், மனம், குறை நிறைகளையும் நன்கறிந்த வாசுதேவ, விமல், தினேஷ், மஹிந்த, விமல், டியு குணசேகர போன்ற ஜாம்பவான்களுக்கும் கண்கட்டு வித்தை காட்டி சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியது அதில் உச்ச கட்டம்.

சர்வாதிகாரியின் கீழ் இயங்கிப் பழகிய அவர்களால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரும் கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவில்லாதவர்களாக்கி, ஒரு வகையில் முட்டாள்களாக்கிய விதமெல்லாம் எம் சமூகத்தால் நுணுக்கமாகப் பார்க்கப்படவில்லை.

எதிரியையே தமது ஆயுதமாக்கிக் கொள்ள கடந்த வருடம் பெப்ரவரியில் ஞானசாரவைத் தம் தேவைக்காகவும் பயன்படுத்த ஆரம்பித்த ஆட்சியாளர்கள் சிறு பிரச்சினைகளைத் தூக்கி வீசி பெரிய பிரச்சினையொன்றை உருவாக்க கடந்த வருடம் நவம்பர் மாதமே தூபமிட்டார்கள். அதன் பயனாக சிறு சிறு முகநூல் தேசியவாதிகளையெல்லாம் அடக்கி ஞானசாரவின் தலைமைத்துவத்தை எற்க வைத்து நேற்றோடு புத்தம் புது அங்கத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் அது முடிவல்ல, ஆரம்பம் என்பது இனி வரும் காலத்தில் நாம் உணர்ந்து கொள்ளப் போகும் உண்மையாகும்.

ஏனெனில், இதுவரை ஞானசாரவின் தனி மனித பிரச்சினையாக இருந்த விடயங்களில் பல இனி சிங்கள தேசத்தின் அடிப்படை உரிமையாக மாறும்.

அசிங்கமான பேச்சும் ஒழுக்கமற்ற நடத்தையும் கொண்ட ஞானசார அதனை அஸ்கிரிய பீடத்தில் கொண்டு சேர்ததது ஓரிரு நாளில் நடந்த பிரச்சினையன்று. ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் இந்த ஆட்சியில் நம்பியோருக்கு விழுந்த பேரிடி!

இலங்கை பௌத்தர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு பல்கலாச்சார நாடு எனும் அடிப்படையை மாற்றியமைக்க வேண்டும் எனும் எழுச்சி காலப்போக்கில் வெற்றியளிக்காது விடின் கூட சிறுபான்மையினர் மீதான ஆதிக்க அரசியலுக்கு மீண்டும் வித்திடப்பட்டுள்ளது.

அச்சம் கலந்த வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற மக்கள் நம்பிக்கை வீண் போனதின் விளைவு அரசியலில் பிரதிபலிக்கும் அளவுக்கு இது குறித்த விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் இருக்கிறதா என்பது விடை காண முடியாத கேள்வி. அது மாத்திரமன்றி, மாற்றுத் தெரிவை எங்கிருந்து பெறுவது என்பதறியாமல் தொடர்ச்சியாக இருக்கும் தெரிவில் சூழ்நிலை சுகம் காணும் வேட்பாளப் பெருமக்கள் தம் கோபத்தை எங்கனம் காட்டப் போகிறார்கள் என்பது இன்னொரு கேள்வி.

ஆனால், இவ்வாறான உணர்வுரீதியான சம்பவங்கள் பொதுவாக சில நாட்களில் மறந்து விடக் கூடியவை. தற்போது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஆதிக்க அரசியலின் அடுத்த அங்கம் இன்னும் கொஞ்ச நாள் அடங்கியிருக்கும். ஆதலால் எல்லாம் சரியென அன்றாட வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகும் அப்பாவி சமூகம் அடுத்த தடவை தன் உணர்வு காயப்படும் வரை இவற்றை நினைத்துப் பார்க்க மாட்டாது.

சூழ்நிலைக்கு எதிர்வினை காட்டுவதிலேயே தொடர்ந்தும் ஆர்வமுள்ள சமூகத்திடம் சொந்த அரசியல் நலனுக்கப்பால் தூரப்பார்வையுடனான விழிப்புணர்வை ஏற்படுத்த போராடும் தலைவர்கள் இல்லை. ஆதலால் உணர்வுகளை உயிரூட்டி வைத்திருக்கும் பொறுப்பை ஊடகங்கள், எழுத்தாளர்கள். சிந்தனையாளர்கள் சமூக சேவகர்கள் தானாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.

விழிப்புடன் அவதானிக்கவாவது தவறி வரும் பட்சத்தில், ஆரவாரமே இல்லாமல் விழக்கூடிய அடுத்த ‘அடி’ யின் வலி இன்னும் அதிகமாக இருக்கும்.

-Rahman Abdul Azeez

https://www.facebook.com/Gallellanews1st

Wednesday, June 21, 2017

ஞானசார தேரரை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான சுமங்கல தேரர் ஏன் பாதுகாக்க வேண்டும்???

ஞானசார தேரரை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான சுமங்கல தேரர் ஏன் பாதுகாக்க வேண்டும்????

Rahman Abdul Azeez
Gallella
Ar4591695@gmail.com
0755218273

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராகபக்‌ஷ நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசாரரை பாதுகாப்பதாக அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்திவரும்  நிலையில் இதன் பின்னணியில் அரசாங்க தரப்பின்  அனுசரனைகளே இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விடயங்கள் அம்பலமாகி வருவதை எம்மால்  அவதானிக்க முடிகிறது.

அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில் இன்று ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க ஜனாதிபதிக்கு ஆலோசகர் போன்று செயற்படுபவரும் ஜனாதிபதிக்கு மிக மிக நெருக்கமாக இருப்பவரும் அவரின் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவருமான ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் களமிறங்கியிருந்தார்.

மத்திய வங்கி ஊழல், கல்குடா மதுபான உற்பத்தி சாலை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த விடயங்களிலும் முன்னாள் ஜானாதிபதி காலத்து ஊழல் தொடர்பிலும் அதிக அக்கறை எடுத்து கொண்டு செயற்பட்டுவந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியில் தலைவர் உலப்பனை சுமங்கள தேரர் கடந்த இரு வாரங்களாக ஞானசார தேரரை காப்பாற்ற கடும் பிரயத்தங்களை மேற்கொண்டிருந்ததோடு இன்று நீதிமன்றம் வரை வந்து அவருக்கு ஆதரவாக களமிறங்கி அவரை பிணையில் எடுக்க முடி மூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக செயற்படும் சுமங்கள தேரர் போன்றவர்கள் ஞானசார தேரர் விடயத்தில் களமிறங்கியதும் ஞானசார தேரருக்கு வரலாற்றில் இல்லாத முறையில் இன்று மிக மிக வேகமாக  பிணை வழங்கப்பட்டிருந்த விடயமும் ஞானசார தேரரை பாதுகாப்பது ஜனாதிபதி தரப்பு என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் மேலும் வழுவடைய செய்துள்ளது.

முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக...

!!!  முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மாற்றப்பட வேண்டிய யாப்புக்கள்  !!!!!!!✍✍✍

Rahman Abdul Azeez
Gallella
Ar4591695@gmail.com
0755218273

ஒரு நாட்டினதோ, கட்சியினதோ, அமைப்புக்களினதோ , குழுக்களினதோ சிறந்த வழிநடத்தலுக்கும், முன்னேற்றத்திற்கும்  அவைகளின் யாப்புக்களே பாரிய பங்களிப்பை வகிக்கின்றன.

அந்த வகையில் எமது முஸ்லீம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , வீழ்ச்சிக்கும், பிரிவுகளுக்கும்   அந்த கட்சியின் யாப்புக்களே பாரிய பங்களிப்பை வகித்ததென்பது நிதர்சனமான உண்மை.

  தொடக்கம் சரியாக இருந்தால்   முடிவும் சரியாக இருக்கும்  என்பதைப் போல்  ஒரு யாப்பின் ஆரம்பம்  சரியாக இருந்தால்  அதை தொடரக்கூடிய அனைத்து  அம்சங்களும் சரியாக இருக்கும் என்பது சான்ரோர் கருத்துக்களாகும்.

அந்த வகையில்  எமது அரசியல் கட்சிகளின் யாப்பின் முதலாவது   அம்சமான  ""ஆயுற் கால தலைமைத்துவம் ""  என்பதே எமது  முஸ்லீம் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாக  அமைகிறது.

இந்த நிலை தொடருமாக  இருந்தால் இன்னும்  ஓரிரு பாராளுமன்ற தேர்தலுக்குள் ""மூன்றாவது முஸ்லீம் கட்சி ஒன்று  உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ""

எமது தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆயுற் கால தலைமைத்துவத்தை மாற்றியமைக்க போவதும் இல்லை. அவ் இடத்தை  தனது  உயிர் போனாலும் யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கும் தயாரில்லை.

!!!!!! முஸ்லீம் சமூகமே உனது குரல்  ஓங்கி ஒலிக்காத வரையில் உனது சமூகத்தில் மாற்றம்  ஏற்படாது.  !!!!!!!!!
✍✍✍✍✍✍✍✍✍

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st* பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற...