!!! முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மாற்றப்பட வேண்டிய யாப்புக்கள் !!!!!!!✍✍✍
Rahman Abdul Azeez
Gallella
Ar4591695@gmail.com
0755218273
ஒரு நாட்டினதோ, கட்சியினதோ, அமைப்புக்களினதோ , குழுக்களினதோ சிறந்த வழிநடத்தலுக்கும், முன்னேற்றத்திற்கும் அவைகளின் யாப்புக்களே பாரிய பங்களிப்பை வகிக்கின்றன.
அந்த வகையில் எமது முஸ்லீம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , வீழ்ச்சிக்கும், பிரிவுகளுக்கும் அந்த கட்சியின் யாப்புக்களே பாரிய பங்களிப்பை வகித்ததென்பது நிதர்சனமான உண்மை.
தொடக்கம் சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும் என்பதைப் போல் ஒரு யாப்பின் ஆரம்பம் சரியாக இருந்தால் அதை தொடரக்கூடிய அனைத்து அம்சங்களும் சரியாக இருக்கும் என்பது சான்ரோர் கருத்துக்களாகும்.
அந்த வகையில் எமது அரசியல் கட்சிகளின் யாப்பின் முதலாவது அம்சமான ""ஆயுற் கால தலைமைத்துவம் "" என்பதே எமது முஸ்லீம் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது.
இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் ஓரிரு பாராளுமன்ற தேர்தலுக்குள் ""மூன்றாவது முஸ்லீம் கட்சி ஒன்று உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ""
எமது தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆயுற் கால தலைமைத்துவத்தை மாற்றியமைக்க போவதும் இல்லை. அவ் இடத்தை தனது உயிர் போனாலும் யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கும் தயாரில்லை.
!!!!!! முஸ்லீம் சமூகமே உனது குரல் ஓங்கி ஒலிக்காத வரையில் உனது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. !!!!!!!!!
✍✍✍✍✍✍✍✍✍
No comments:
Post a Comment